இ.போ.ச சாரதிகள், நடத்துநர்கள் விடுமுறை ரத்து

இலங்கை போக்குவரத்துச் சபையில் பணி புரியும் அனைத்து சாரதிகள், நடத்துனர்களினதும் விடுமுறை இன்று (26) முதல், மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்களை இன்று தொடக்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இவ்வாறு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இ.போ.சபைக்குச் சொந்தமான 5,000 இற்கும் மேற்பட்ட பேருந்துகள் இன்று தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்று சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வௌி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு பணிக்காக வரும் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்காக 27 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435