கொவிட் 19 தொற்று பரவியிருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தில் கொவிட் 19 தொடர்பான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாத நிலையில் கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடைய பூதவுடன் நாட்டின் பல பிரதேசங்களுக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டம் பின்பற்றப்படவில்லை. நாட்டின் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார துறையினரும் முப்படையினரும் கடுமையாக பாடுபட்டு வரும் இச்சூழலில் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் தேகம் நாட்டில் 5 இடங்களுக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. இதனூடாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக மக்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பின்பற்றிய தனிமைப்படுத்தல் நடைமுறை மீறப்பட்டு மக்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

இறந்த உடல்களை ஒரு நாளைக்கு மேல் வைத்தால் தொற்று பிரச்சினை ஏற்படும் என்று ஒரே நாளில் எரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் இறந்த உறவுகளை பார்க்கும் சந்தர்ப்பத்தை பலர் இழந்துள்ளனர். இந்நிலையில் அமைச்சரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டம் மீறப்பட்டுள்ளமையானது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல். இதனை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் அமைச்சர் சார்ந்தோரால் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அறியக்கிடைத்துள்ளது.

இத்தகைய செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம். இறுதி நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு ஏதேனும் நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் நாம் கடுமையாக சட்டநடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். தேசிய ரீதியாக இருந்தாலும் சரி சர்வதேச ரீதியாக இருந்தாலும் சரி பொது சுகாதார பரிசோதகர் சங்கம் என்ற ரீதியில் நாம் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435