கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஓகஸ்ட் முதலாம் திகதி மீண்டும் முழுமையாக திறக்கப்படவுள்ளது என்று விமானநிலைய, விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்பாடுகளை முழுமையாக ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதன் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
புதிய விதிமுறைகளுக்கமைய விமான நிலைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. நாட்டுக்கு வரும் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை விமான நிலைய வளாகத்தினுள்ளேயே மேற்கொள்ளப்பட்டு உடனடியாக பெறுபேறுகளும் வழங்க தீர்மானித்துள்ளோம்.
அதற்கமைய, விமான நிலைய வளாகத்தினுல் அனைத்து வசதிகளும் கொண்ட ஆய்வுகூடம் விரைவில் அமைக்கப்படவுள்ளது என நெத் செய்தி சேவையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பி.ஏ. சந்திரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.