வௌிநாடுகளில் இருப்போரை நாட்டுக்கு அழைத்து வருவது என்ற அரசாங்கத்தின் கொள்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (வௌிவிவகாரம்) அட்மிரல் பேராசிரியர் ஜயந்த கொலம்பகே தேசிய ஆங்கில நாளிதழான டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மீள அழைத்து வரப்பட்ட பின்னர் புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், அமெரிக்கா, பெலாரஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
“தற்போது, நாங்கள் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். ஏறக்குறைய 275 மாணவர்கள் பிலிப்பைன்ஸிலிருந்து நாளை (11) அழைத்து வரப்படவுள்ளனர். அவர்கள் இலங்கைக்கு வந்தவுடன் விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனைகளுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள். தற்காலிக விசாக்களில் வெளிநாடு சென்றவர்களை நாங்கள் மீண்டும் அழைத்து வருவோம். இவ்வாறு தற்காலிக வீசாவில் சென்றவர்கள் குறித்து தகவல்கள் அதிகம் கிடைத்துள்ளது. அப்பணிகள் முடிந்தவுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வேலைகளை இழந்தவர்கள் என முன்னுரிமை அடிப்படையில் மீண்டும் அழைத்து வருவோம், ”என்று அட்மிரல் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பதிவான 30 வீதமான கொவிட் 19 தொற்று”இறக்குமதி செய்யப்பட்டவையாக’ பதிவாகியுள்ளன” நாட்டில் உள்ள மருத்து வசதிகளுக்கமைய அதிக எண்ணிகையான கொவிட் 19 நோயாளர்களை ஒரேநேரத்தில் கையாள முடியாது.
“அதனால்தான், இலங்கை வர விரும்பும் இலங்கையர்களுக்கான பி.சி,ஆர் பரிசோனையை அந்தந்த விமானநிலையங்களில் மேற்கொள்ளுவது தொடர்பில் தொடர்புபட்ட நாடுகளுடன் கலந்துரையாடி வருகிறோம். இதனூடாக இலங்கைக்கு வருபவர்களின் கொவிட் 19 தொற்றுள்ளவர்களை விரைவில் அடையாளங்காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.