அரச மற்றும் தனியார் துறையினரின் வேலை நேரத்தில் மாற்றங்களை கொண்டு வர அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதற்கமைய, அரச துறையில் பணிகள் 9.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.45 மணிக்கு நிறைவடையும். தனியார்துறை வேலை நேரம் 9.45 மணி தொடக்கம் 6.45 மணி வரை மேற்கொள்ளவும் முன்மொழியப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று காரணமாக இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக இடைவௌியை பேணுவதற்கு இம்முறை உதவியாக இருக்கும். அத்துடன் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் இது உதவியாக இருக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை தயாரிக்க மேலதிக செயலாளர் திலகரத்ன பண்டா தலைமையிலான குழுவொன்றை நியமித்துள்ளார்.
குறித்த குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று (30) போக்குவரத்துத்துறை அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவினால் அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை அரச நிருவாக அமைச்சு மற்றும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் முன்மொழிவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.