ஆசிரியர்கள் பி.ப 3.30 மணிவரை பாடசாலையில் தங்கியிருக்க வேண்டுமா?

பாடசாலை நேரம் நிறைவடையும் நேரம் பிற்பகல் 3.30 என கல்வியமைச்சு அறிவித்திருந்த போதிலும் அனைத்து ஆசிரியர்களும் 3.30 மணிவரை பாடசாலையில் தங்கியிருக்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 6ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தவறவிடப்பட்ட கற்றல் நேரத்தை தழுவும் வகையில் பிற்பகல் 3.30 மணி வரை ஆசிரியர்கள் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வியமைச்சு அறிவித்திருப்பது தொடர்பில் தொழிற்சங்கங்கள் ஆசிரியர்கள் அதிருப்தி வௌியிட்டிருந்தனர். இதற்கு விளக்கமளிக்கும் வகையில் இவ்விடயம் கல்வியமைச்சின் இணையதளத்தில் வௌியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தரும்போது தமக்குரிய நேரசூசியின்படி உரிய காலத்திற்குள் கற்பிப்பதற்கு மட்டும் பாடசாலையில் தங்குவது போதுமானது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435