வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் நிறைவுற்ற பின்னரே சர்வதேச விமானநிலையத்தை திறப்பது தொடர்பான தீர்மானம் எட்டப்படும் என விமானநிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜி.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் நிறைவடைய மூன்று வாரங்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மேலும் செல்லாம். எவ்வாறு இருப்பினும் குறித்த பணிகள் நிறைவடைந்த பின்னரே பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என டெய்லி மிரர் பத்திரிகைக்கு ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தாய்நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.