இலங்கையல் நேற்று 300 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட தினமாக நேற்றைய தினம் பதிவானது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்று 283 பேருக்கு கொவிட்-19 தொற்றுயதியானது.
இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய 9 பேருக்கும், பாகிஸ்தானிலிருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பிய 3 பேருக்கும் தொற்றுறுதியானது.
அத்துடன், வெலிக்கடை சிறைச்சாலையில் தொற்றுறுதியான கைதியுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கும், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பிலிருந்த மேலும் 3 பேருக்கும் என மொத்தமாக 300 பேருக்கும் தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் தொற்றுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது.
ஆயிரத்து 980 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்று 239 பேருக்கும், நேற்று முன்தினம் 56 பேருக்கும் தொற்றுறுதியானது. அங்கு இதுவரையில் 339 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அங்கு ஆலோசகராக செயற்படும் மாரவிலயை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்றுறுதியானது.
கொவிட்-19 தொற்றுறுதியான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 4 மாதங்கள் ஆகியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி சுற்றுலா வழிகாட்டியான இலங்கையர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இந்த நிலையில், நாட்டில் நேற்றைய தினம் 300 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட தினமாக நேற்றைய தினம் பதிவானது.