கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பிரபல ஆடைத் தொழிற்சாலைகளில் ஒன்றான ஹைட்ராமணி தனது தொழிற்சாலைகளில் சிலவற்றை மூடப்போவதாக அறிவித்துள்ளது.
தமது தொழிற்சாலைகளுக்கு கிடைத்து வந்த உற்பத்திகட்டைளைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம் தற்காலிகமாக நிறுவனங்களை மூடுமாறு அறிவுறுத்தல்களை வழங்கியதற்கமைவாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனபிஸ்னஸ் டைம்ஸிடம் குறித்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்கப்படுகிறது.
மீண்டும் கட்டளைகள் பெறப்பட்ட பின்னர் இத்தொழிற்சாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் நிலைமை விரைவில் வழமைக்குத் திரும்பும் எனவும் என அந்நிறுவனம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
நாட்டில் சுமார் 19 ஹைட்ராமனி ஆடைத்தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இந்நிறுவனம் மாத்திரமன்றி நாட்டில் உள்ள பல ஆடைத் தொழிற்சாலைகள் இதே பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றன.
இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ரெஹான் லக்கானி பிசினஸ் டைம்ஸிடம் செப்டம்பர் முதல் வழக்கமான உத்தரவுகளில் குறைவு காணப்படுகிறது என்று கூறினார்.
செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மிகவும் கடினமான காலம் இருக்கும், ஏற்றுமதியாளர்கள் ஜனவரி முதல் கட்டளைகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். எவ்வாறாயினும், எதிர்காலத் திட்டங்கள் குறித்து தற்போது நிறுவனங்களிடமிருந்து எந்த உறுதிப்பாடும் இல்லை, இந்த விஷயத்தில், “விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாங்கள் காண வேண்டும்” என்றார்.
ஜூலை மாதத்தில் கடுமையான காலம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக ஏனைய தொழில் அதிகாரிகள் தெரிவித்தனர்.