கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையையும், 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையையும் நடத்தும் தினம் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ள கல்வி அமைச்சு இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளது.
நாட்டில் தற்போது கொவிட்-19 பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இன்று ஆராயப்படவுள்ளது.