200க்கும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டலில் கல்வி அமைச்சு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
200க்கும் அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் ஒவ்வொரு தினமும் வெவ்வேறு தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து அந்த நடைமுறையை தளர்த்துவதற்கு கவ்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய பாடசாலைகளை முன்னெடுக்க முடியுமாயின் மாணவர்களை வழமைபோல பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு தடையில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.