கிழக்கு மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுடைய விடுமுறையை குறைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.
விடுமுறையை குறைப்பது தொடர்பில் மாகாண பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு கோரி அச்சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்கவுடைய கையெழுத்துடன் அக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வாபஸ் பெறுவது தவறும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.