யக்கலையில் உள்ள எஸ்குவல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்களில் சுமார் 830 பேர் சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கத்தின் உறுப்புரிமையை பெற்றுள்ள நிலையில், கொவிட்-19 தொற்று தாக்கத்தை குறிப்பிட்டு, பணியாளர்களுக்காக ஒரு தன்னார்வ இழப்பீட்டுத் திட்டமாக இருப்பதைக் காரணம் காட்டி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இழப்பீட்டை பெற்றுக்கொள்ளாத சுமார் 430 ஊழியர்கள் ஏக்கலையில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டதுடன், சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் சங்கத்தின் தலையீட்டால் அவர்களின் தொழில்கள் பாதுகாக்கப்பட்டன. நீண்ட காலமாக இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கம், ஏக்கலையில் உள்ள தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தை உருவாக்கியுள்ளதுடன், 117 ஊழியர்கள் அந்த சங்கத்தில் உறுப்புரிமையை பெற்றுள்ளனர்.
ஏக்கலை தொழிற்சாலையில் 1000 க்கும் மேற்பட்டோர் பணியாற்றிய நிலையில், தற்போது யக்கலையில் இருந்து வந்தவர்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் அங்கு பணியாற்றுகின்றனர். தற்போது வரையில் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கத்தில் 432 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஏக்கலையில் உள்ள கைத்தொழிற்சாலையும் மூடப்பட வேண்டி நிலை ஏற்படுவதாக நிர்வாகத்தினரால் தொழிலாளர்களிடம் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில், சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தினால் கடந்த ஓகஸ்ட் மாதம் 22 திகதி கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்க அதிகாரிகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்புக்கமைய, அவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், சுமார் 50 பேரளவில் அதில் கலந்துகொண்டிருந்தனர்.