நீதியமைச்சில் நியமனம் பெற்றுத் தருவதாக நிதி மோசடி

நீதியமைச்சில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சர் அலி சப்ரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

முகாமைத்துவ உதவியாளர், அலுவலக உதவியாளர், சாரதி மற்றும் பாதுகாவலர் பதவிகளை பெற்றுத்தருவதாக கூறி போலி நேர்முகத்தேர்வுக்கான கடிதம் மற்றும் நியமனக்கடிதம் வழங்கி இளைஞர் யுவதிகளிடம் நிதிமோசடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் யுவதிகளிடமிருந்து 17,500 ரூபா தொடக்கம் 185,000 ரூபா வரை நிதி பெறப்பட்டுள்ளதாகவும் பணம் செலுத்தியமைக்கான ரசீதுகளை பாதிக்கப்பட்டோர் வைத்திருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை, நீர்கொழும்பு, தங்கொட்டுவ, கல்கிஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் உள்ள இளைஞர் யுவதிகளே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அரச நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான முறையொன்று உள்ளது. கற்ற இளைஞர் யுவதிகள் என்ற வகையில் இது குறித்து ஆராய்ந்து செயற்படுவது அவரவர் கடமை என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435