உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் கொழும்பில் சில பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதற்மைய, மட்டக்குளிய, மோதர, வெல்லம்பிட்டிய,புளுமெண்டல் மற்றும் கிராண்பாஸ் ஆகிய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவுக்கமைய இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் தமது வௌிநடமாட்டங்களையும் தொடர்புகளையும் குறைத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பிரதேசங்களுக்கூடாக வாகனங்கள் பயணிக்கலாம் என்றும் ஆனால் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படாது என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டக்காட்டியுள்ளார்.
அத்தியவசிய சேவையில் உள்ளவர்கள் அவர்களுடைய சேவை அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.