கொரோனா வைரஸை தங்களது வீடுகளுக்கு கொண்டு செல்லாமல் செயற்படக்கூடிய நிலைமை உள்ளது என்பதை வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்களிடமிருந்து பொதுமக்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர்இ மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா நோயாளர்கள் ஒவ்வொரு இடத்தில் பாரியளவில் அடையாளம் காணப்படுகின்றமையால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்ற நிலைமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.
எனினும், இது உலக பரவல் தொற்று என்பதன் காரணமாக நோயாளர்கள் இவ்வாறு ஒவ்வொரு இடத்தில் அடையாளம் காணப்படக் கூடிய ஒரு அபாய நிலையில் தான் நாங்கள் இருக்கின்றோம்.
இந்த சவாலை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாங்கள் இருக்கின்றோம்.
இதேவேளை, பொதுமக்கள் என்ற அடிப்படையில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
கொரோனா நோயாளர்கள் இருக்கின்ற வைத்தியசாலை வார்ட்களுக்கு நாங்கள் (வைத்தியர்கள்) செல்கின்றோம். ஏனைய சுகாதார ஊழியர்கள் பல மாதங்களாக அவர்களுக்கு சேவை செய்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வார்ட்களில் இருந்து வெளியே வருகின்றனர்.
இவ்வாறானவர்களுள் பெரும்பாலான வைத்தியர்கள் மாலை நேரங்களில் தங்களது வீடுகளுக்கு செல்கின்றனர். ஆனால், அவர்களில் எவரும் இந்த நோயை தங்களது வீடுகளுக்கு கொண்டு செல்லவில்லை.
எனவே, கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்றது என்று தெரிந்த இடத்திற்கு சென்றாலும்இ அந்த வைரஸை தங்களது வீட்டுக்கு கொண்டு செல்லாமல் செயற்படக்கூடிய நிலைமை உள்ளது என்பதை பொதுமக்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். – என்று அவர் தெரிவித்துள்ளார்.