கொவிட் 19 தொற்றால் நாட்டில் 20 ஆவது மரணம் சம்பவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் (30) உயிரிழந்த நோயாளியின் Pஊசு பரிசோதனை அறிக்கைக்கு அமைவாக கொவிட் 19 தொற்று நோயாளி என்பது தொற்று நோயியல் பிரிவினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இவர் 54 வயது பெண் ஆவார்.
கடந்த 29 ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நாட்பட்ட நோய்களினால் அவதிப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.