மருத்துவர்கள் உட்பட சுகாதாரசேவையில் உள்ள 50 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது என்று அரச வைத்திய அதிகாரகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய லங்காதீப பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுமார் 300 பேர் வரை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தொற்று ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவை ஊழியர்களை பாதுகாத்து கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வரும் சுகாதாரதுறை ஊழியர்களுக்கு அவசியமானபாதுகாப்பு உபகரணங்கள், போக்குவரத்து வசதிகள், ஓய்வு என்பவற்றை உடனடியாக பெற்றுகொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.