ஶ்ரீலங்கன்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் சுயவிருப்ப ஓய்வூதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஶ்ரீலங்கன்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனம் எதிர்நோக்கியுள்ள நிதி பிரச்சினை காரணமாக இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டி சுற்றுலாத்துறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இச்சுய விருப்ப ஓய்வூதிய திட்டத்தினூடாக சுமார் 560 ஊழியர்கள் வரை ஓய்வுபெறுவர் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்காக சுமார் 1.46 பில்லியன் ரூபா நிதி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டை மதிப்பீடு செய்வதற்கான விமானசேவைகள் மற்றும் ஏற்றுமதி வல உற்பத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது எதிர்வரும் 3 வருட காலத்தில் நிறுவன சேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு குறித்த சுயவிருப்ப ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவற்கான ஆலோசனைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.