தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்த்த ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தின் உத்தியோகத்தர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அழைப்பு விடுத்துள்ளார்.
சுகாதார நிபந்தனைகளுக்கு அமைய மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தின் செயற்பாடுகள் முழுமையாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தின் உத்தியோகத்தர்கள் தங்களது பிரிவின் உதவி அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கமைய பணிக்கு மீள திரும்புமாறு அஞ்சல் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர் ஒருவருக்கு இம் மாதம் ஆரம்பத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.