இம்முறை வரவுசெலவு திட்டத்தில் அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு அவசியமான நிதி ஒதுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைதிப் போராட்டத்தை முன்னெடுக்கு அதிபர் ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, அரசாங்கத்தின் சௌபாக்கியத்தை நோக்கி மற்றும் அமைச்சரவை தீர்மானத்திற்கமைய ஏற்றுக் கொண்டதற்கு அமைவாக முதலாவது வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளப்படாமைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள, அமைதிப் போராட்டம் ‘2020 டிசம்பர் முதலாம் திகதி காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் நடைபெறவுள்ளது.
கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு அன்றைய தினம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றது.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக சமூகமளிக்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது தொழிற்சங்கங்களுடன் இணைந்து தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் படி கோரப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் 2020.11.22 திகதி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பபட்டமை குறிப்பிடத்தக்கது.