கொரோனாவால் மேலும் 7 பேர் பலி: நாட்டில் மொத்த மரணங்கள் 116 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் 7 பேரின் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் பதிவான மரணங்களின் விபரம்

01. கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான பெண் ஆவார்,  கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் இந்த வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமை மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02. கொதட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண் நபர், 27ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்றுடன் நிமோனியா, நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு நோய் அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

03. மொரட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான ஆண் நபர், கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்டு சிகிச்சைப்பெற்ற வந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால் அதிகரித்த நிமோனியா நோய் நிலையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

04. சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆண் நபர், சிலாபம் ஆதார வைத்தியசாலையில் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு, அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொவிட் 19 நிமோனியா ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

05. அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான பெண், கராபிட்டிய போதனா வைத்தியசாலையிலிருந்து கொவிட் 19 தொற்றக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 27ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நாள்பட்ட நீரிழிவு நோயுடன் கொவிட் 19 நிமோனியா நிலை ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

06. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதான பெண், கொவிட் 19 தொற்றக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில், 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமையினால் ஏற்பட்ட நிமோனியா நோய் நிலைமை ஆகும்.

07. மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண், 27ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று நிலைமையுடன் நுரையீரல் செயலிழந்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435