பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச வாரத்தை முன்னிட்டு இந்த ஆக்கம் தொகுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2020 ஆம் ஆண்டு முழு உலகத்திற்கும் விசேடமான வருடமாக உள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவல் முழு உலகத்திலும் வியாப்பித்து இருப்பது அதற்கு காரணமாகும். கொவிட் பரவலுக்கு மத்தியில் தங்களது உயிரையும் துச்சமெனக் கருதி முன்னிலையில் நின்று போராடுபவர்கள் சுகாதாரத் துறையில் உள்ள பெண்களாவர்.
சுகாதாரத்துறையில் சிறப்புமிக்க குழுவாக தாதியர்களை குறிப்பிடலாம். இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள தாதியர்களின் எண்ணிக்கை சுமார் 40,000ஆக உள்ளது. அவர்களுள் 95 வீதமானவர்கள் பெண்களாவர். ஒட்டுமொத்த சமூகத்திலும் தாதிய உத்தியோகத்தர்கள் அன்புக்குரிய தாயாக, மனைவியாக, பிள்ளையாக பாத்திரம் வகிக்கின்றனர். தமது வகிபாகத்தை அவர்கள் தமது பணியிடத்தில் சிறந்த முறையில் நிறைவேற்றுகின்றனர். தாதியர் சேவையில் ஈடுபட வேண்டுமாயின் அவர்கள் அறிவிலும், திறமையிலும், ஆரோக்கியத்திலும் சிறந்தவராக இருக்க வேண்டும். அத்துடன், உடல், உள ரீதியாகவும் பலம் மிக்கவராக இருக்க வேண்டும். வைத்தியசாலையில் நோயாளர் ஒருவரை குணமடைய செய்வதற்கு அவர்கள் நிச்சயமாக அறிவிலும், திறமையிலும் சிறப்பு மிக்கவராக இருக்க வேண்டும்.
தமது பணி இடமான வைத்தியசாலையில் அவர்கள் பல்வேறு வன்முறைகளுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகின்றனர். விசேடமாக தாதிய துறையில் 95 வீதமானவர்கள் பெண்களாக உள்ள நிலையில், அவர்களின் உயர் பதவிகளையும் பெண்கள் வகிக்கின்றனர். தாதியர் சேவையில் சிரேஷ்ட மற்றும் கனிஷ்டத்துவத்தின அடிப்படையில் வைத்தியசாலையில், கனிஷ்டமானவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளவது ஒரு காரணமாகும். இந்த நிலைமை பெரும்பாலான வைத்தியசாலைகளில் பொதுவானதாகும். இதன்போது கனிஸ்ட சேவையாளர் தமது சேவையில் அதிருப்தியுடன் காணப்படும் நிலையும் இருக்கும். இவ்வாறான நிலையில் அவள் அல்லது அவன் நோயாளருக்கு உச்சபட்ச சேவையை வழங்க முடியுமா?
அத்துடன், தாதியர் சேவையில் பாகுபாடு காட்டப்படும் நிலையும் பொதுவாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது. திறமை மற்றும் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு தொழிலில் பதவி உயர்வு மற்றும் பயிற்சிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதற்கு பதிலாக உயரதிகாரிகள் அல்லது பிரிவுக்கு பொறுப்பானவர்களுக்கு பக்கச்சார்பாக இருப்பது அதனை பெற்றுக் கொள்வதற்கு இலகுவான ஒரு வழியாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக இருக்கும் நபர்கள் பழிவாங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு பயிற்சிகள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட ஏனைய சிறப்புரிமைகள் இல்லாது செய்யப்படுவதை பெரும்பாலான வைத்தியசாலைகளில் காணக்கூடியதாக உள்ளது. தாதிய உத்தியோகத்தர்கள், நோயாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கினாலும், அவர்கள் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு இரண்டாம்தர கவனிப்பு இடம்பெறுகின்றமை வைத்தியசாலைகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சில தாதிய உத்தியோகத்தர்கள் வன்முறை ரீதியாக நடத்தப்படுவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இவ்வாறான நிலையில், சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களில் இருந்து அவர்களை மீட்பதற்காக C 190 பிரகடனத்தை இலங்கையில் நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.
அனைத்து வைத்தியசாலை கட்டமைப்பிலும் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து சேவையாளர்களுக்கும் தற்போதைய சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை இதுவாகும்.
சிங்களம் – அனுருத்திகா இரோஷனி ஜயரட்ன –
அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் – மகளிர் ஒன்றியம்
தமிழாக்கம் – பாரதி