நான் ஜனாதிபதியாக தெரிவாகிய பின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று வழங்கப்படும் நாள் ஒன்றுக்கான 700 ரூபாய் வேதனத்தை உயர்த்தி நாளொன்றுக்கு 1500 ரூபாய் வழங்குவேன் என உறுதியளிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம் கொத்மலை நகர மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேயிலை தொழிலை முன்டுனெடுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாதாந்தம் 14000 ரூபாவை சம்பளமாக பெறுகின்றனர். அப்படியென்றால் நாளொன்றுக்கு 700 ரூபாவை பெறுகின்றனர். ஆனால் 4 பேர் வசகிக்கும் ஒரு குடும்பத்தில் 50 தொடக்கம் 55000 ரூபா வரை அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்ல தேவைப்படுவதாக புள்ளி விபரம் கூறுகிறது.
இந்த நிலையில் நான் ஆட்சிக்கு வந்தால் உங்களை வழி நடத்தும் திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் சார்பாக நாளொன்றுக்கு 1500 ரூபாவை சம்பமாக வழங்க உறுதி வழங்குகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.