தாதியருக்கு விசேட பயிற்சி

நாடு பூராவும் உள்ள தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் தாதியர்களுக்கான விசேட பயிற்சிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தொற்றா நோய்களை தடுப்பது குறித்து பொதுமக்களை தௌிவுபடுத்தல் மற்றும் தொற்றா நோய்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு, வாழ்வை மகிழ்ச்சியைாக கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான விசேட பயிற்சி இதனூடாக வழங்கப்படுகிறது.

பொது சுகாதார தாதியர் அதிகாரிகளை இணைத்துக்கொண்டு அவர்கள் துறைகளில் தொற்றா நோய்களை வராமல் தவிர்ப்பதற்கான சேவையில் இணைத்துக்கொள்ளும் வரை குறித்த அதிகாரிகள் அச்சேவையை வழங்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

சுகாதார அமைச்சின் அடிப்படை சுகாதார சேவையை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 150 இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என அத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயசுந்தர பட்டார தெரிவித்துள்ளார்.

துறைகளில் பணியாற்றுவதற்கான பயிற்சிகள், தொடர்பாடல் திறமைகள் மற்றும் சிகிச்சை முறை குறித்த நவீன அறிவை இப்பயிற்சியினூடாக வழங்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றா நோய் குறித்த பிரதி பணிப்பாளர் நாயகம் அலுவலகத்துடன் இணைத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட பயிற்சி இன்று (10) ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் தெரிவு செய்யப்பட்ட தாதியர்களுக்கு 5 நாள் வதிவிட பயிற்சி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435