பதியாது சென்றால் பணியகம் பொறுப்பேற்காது!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாது சட்ட விரோதமாக வெளிநாட்டு தொழிலுக்காக செல்பவர்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொறுப்பு கூறாது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காலி கிளை காரியாலயத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலின் போதே பிரதியமைச்சர் இதனை தெரிவித்தார்.

பிரதியமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில், வெளிநாடுகளுக்கு பெண்கள் பணிப்பெண்களாக செல்வது தற்போது 40 வீதமாக குறைந்துள்ளது. இதனை இன்னும் குறைப்பதனூடாக குடும்ப மற்றும் சமூகம் சார் பிரச்சினைகளை எமக்கு குறைக்க முடியும்.

அரசு என்ற ரீதியில் பயிற்சி பெற்ற பெண்களை நாம் தொழிலுக்காக அனுப்ப வேண்டும். குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு செல்ல முனையும் பெண்களை முதலில் தன் குடும்ப ஆணை வெளிநாட்டு வேலைக்காக அனுப்ப முயற்சிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். அதன் பின் எங்களை நாடினால் என்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை நாங்கள் தெளிவுபடுத்துவோம்.

பணிப்பெண்களாக செல்ல முயற்சிகள் பெண்களின் குடும்ப பின்னணி தொடர்பில் பணியகம் ஆராயும். அவ்வறிக்கையை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்பட்டு வாய்ப்பை இழக்கும் பெண்களே சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முனைகின்றனர். இதனை தடுக்க எமது அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பதிவு செய்யாது வெளிநாடு சென்று இடையில் பிரச்சினை என்றால் பணியகம் பொறுப்பேற்காது. குடும்ப பின்னணியை காரணம் காட்டி வாய்பை இழப்பவர்கள் சட்டவிரோதமாக செல்ல முயல்வதை தடுக்கவும் தற்போது சட்ட ஏற்பாடுகள் உள்ளன என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435