புலம்பெயர் தொழிலாளர்களிடம் ஏமாற்றி பணம் பறித்த கும்பல் கைது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வரிச் சலுகையுடன் கூடிய கடன் பெற்றுக்கொடுப்பதாக கூறி பணம் பறித்த கும்பலை கிருலபன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் சலுகை வட்டியுடன் கடன் வழங்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சந்தேகத்தின் ​பேரில் சுற்றிவளைக்கப்பட்டபோதே மேற்கூறப்பட்டவை கைப்பற்றப்பட்டன. அதன்போது பிரதான சந்தேகநபர் தப்பியோடிய நிலையில், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது நேற்று (10) ராஜகிரிய, ஒபேசேக்கரபுர பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒளிந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இக்குற்றச்செயலுக்கு சந்தேகநபரின் மகன் மற்றும் நாராஹேன்பிட்ட பிட்டபெத்தர பிரதேசத்தைப் சேர்ந்த நான்கு நபர்களும் தொடர்புபட்டுள்ளனர். அப்போலியான சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து அதனூடாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தில் வழங்கும் கடனை பெற்றுக்கொடுப்பதாக கூறி அத்தொகையில் 10 வீதத்தை அவ்வங்கிக் கணக்குகளினூடாக வங்கி அட்டைகளை பயன்படுத்திப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கிருலபன பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து இக்குற்றச்செயல் கண்டறியப்பட்டுள்ளது. இக்குற்றச்செயலானது கடந்த 2019ம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த கொரோனா காலப்பகுதியில் மட்டும் 500 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பழைய சாரதி அனுதிப்பத்திரம் வழங்குவதற்கு ஒருவரிடமிருந்து பத்தாயிரம் ரூபாவும் புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு 15,000 ரூபாவும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பல பாகங்களில் உள்ளவர்களுக்கு இவ்வாறு போலியான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது. வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் நடத்தி வந்த போலி கச்சேரியை கடந்த 26ம் திகதி கிருலபன குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இச்சுற்றிவளைப்பின் போது 61 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், 5 சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரங்கள், 14 வங்கி அட்டைகள். மடிக்கணனிகள், சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் இயந்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான சிப் உட்பட 925 கார்ட்கள், 2 போலி றப்பர் முத்திரைகள், 15 கையடக்கத் தொலைபேசிகள், 40 சிம் அட்டைகள், 20 இலட்சம் நிலையான வைப்பு செய்தமைக்கான ரசீது மற்றும் 2 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (11) அளுத்கடை நீதிமன்றில் நிறுத்தப்பட்ட 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதி பெறப்பட்டு நீண்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிருலப்பன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435