பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக தலைநகரில் திரண்ட இளைஞர்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளாவிய ரீதியில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஒருமீ என்ற சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியமும், ஏனைய சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து ஆயிரம் இயக்கம் என்ற பொது பெயரில் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

கேகாலை, பதுளை, தெமோதரை, எட்டம்பிட்டிய, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மாத்தளை, கண்டி, மத்துகம, மட்டக்களப்பு, பதுரலிய, தலவாக்கலை, ராகல, நுவரெலியா, தெல்தோட்டை, இரத்தினபுரி முதலான இடங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய நாடுதழுவிய போராட்டத்தின் பிரதான எதிர்ப்பு பேரணி சகல பொதுநல அமைப்புக்களதும் பங்களிப்புடன் கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போது அங்கிருந்து பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள், புறக்கோட்டை அரசமர சந்திவரை சென்று அங்கு பொதுக் கூட்டமொன்று நடத்தப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட சிவில் சமுக அமைப்புகளின் ஒன்றியமான ஒருமீ அமைப்பின் இணைப்பாளர்களுள் ஒருவரான ராமச்சந்திரன் சனத், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன பிரச்சினைக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முன்வைக்கப்படவுள்ள பாதீடு மூலமாகவேணும் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என யோசனை முன்வைத்துள்ளார்.

இதேநேரம், மலையக இளைஞர்களின் இந்தப் போராட்டத்தை திசைத்திருப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைகூடவில்லை என ஒருமீ அமைப்பின் இணைப்பாளர்களில் ஒருவரான தனபாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருதது வெளியிட்ட சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் பிரதிநிதி மயூரன் முரளிதரன், எங்கெல்லாம் தொழிலாளர் வர்க்கத்திற்கு அநீதி இழைக்கப்படுகின்றதோ அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435