பெருந்தோட்ட மக்கள் தொடர்பான ஜனாதிபதியின் முக்கிய தீர்மானங்கள்

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று மதியம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்> ஜனாதிபதி செயலாளர் பீ. பி. ஜயசுந்தர,  ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

தோட்ட மக்கள் வாழும் லயன் வீடுகளுக்கு, தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரம், அவர்கள் வாழ்ந்துவரும் சூழமைவுக்கு உள்ளேயே மேம்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் போது லயன்களை அண்மித்ததாகவே அவற்றை நிர்மாணிக்க வேண்டும்.

இதற்கான அவசியத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, தானும் சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் தோட்ட மக்களுக்காக 4,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரையில் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 669 ஆகும்.

உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும்போது ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகளே நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கு காரணமாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வீடமைப்பு திட்டமிடலை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதன் மூலம் நிர்மாணப் பணிகளின் தரத்தை சிறப்பாக்க பேண முடியும்.

தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுடன் இணைந்ததாக தனியார் தோட்ட நிறுவனங்களும் தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினேன்.

சுகாதாரம், கல்வி, விவசாயம், வீடமைப்பு, விளையாட்டு உள்ளிட்ட அமைச்சுக்களின் உதவிகளைப் பெற்று – தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோட்ட முன்பள்ளி பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகள் ஆகியன தமது சுகாதார தேவைகளுக்கான மருத்துவ நிலையங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் நான் குறிப்பிட்டேன்.

தோட்டங்களை அண்மித்து வாழும் இளைஞர், யுவதிகளுக்கு NVQ மட்ட சான்றிதழை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொழில் பயிற்சியை வழங்கி, அவர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தோட்டங்களை அண்மித்ததாக உள்ள 438 சுகாதார நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வந்து, சிறந்த சேவையை தோட்ட மக்களுக்காக துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

பண்டாரவளை, ஹட்டன்இ நுவரெலியா மற்றும் எல்ல பிரதேசங்களை மையப்படுத்தி – சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தோட்டங்களும் கிராமங்களும் துண்டிக்கப்படாத வகையில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435