லங்காபுர பிரதேச செயலகத்தில் சேவையாற்றும் ஒருவருக்கு கொரோனா

லங்காபுர பிரதேச செயலகத்தின் பணிக்குழாமில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லங்காபுர பிரதேச செயலகத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் ஒருவருக்கு மாத்திரம் கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று உறுதியானவர் இதற்கு முன்னர் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு முகாமில் அடையாளங்காணப்பட்ட கொவிட் 19 நோயாளருடன் தொடர்பினை பேணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளவருடன் தொடர்பினை பேணியுள்ளவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435