இன்று நள்ளிரவு முதல் 24 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அஞ்சல் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன
ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, வேதன முறைமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அஞ்சல் சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் நேற்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கோரிக்கை விடுத்தார்.
எவ்வாறிருப்பினும், தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.