அத்தியாவசிய தேவைகளுக்காக என்றபோதும் வீட்டிலிருந்து வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவது தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலக்கங்களின் அடிப்படையிலாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிக்கப்பட்டுள்ளதாவது,
அந்த வகையில் திங்கட் கிழமை நாட்களில் வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவோர் இலக்கம் 1அல்லது 2 என்ற இலக்கங்களை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களாக கொண்டுள்ளவர்கள் மட்டுமேயாகும்.
வாரத்தின் ஏனைய நாட்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு பின்வருமாறு இடமளிக்கப்படும்.
செவ்வாய்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
புதன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
வியாழன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
வெள்ளி : அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முகநூல் பக்கத்தில் இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்கால நடமாட்டத்தின் போது – தேசிய அடையாள இலக்க நடைமுறை தொடர்பான தெளிவுபடுத்தல்:
தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கங்களின் அடிப்படையில் மக்கள் வெளியில் செல்வதற்கான அனுமதி — ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் இடங்களுக்கு உரிய நடைமுறை ஆகும்.
ஊரடங்குச் சட்ட தளர்வு ஏற்படுத்தப்படும் இடங்களில் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த தேசிய அடையாள அட்டை முறைமை அறிமுகப்படுத்தப்படுகின்றது.
அதே வேளை – ஊரடங்கு நடைமுறையில் உள்ள இடங்களில் உள்ளவர்கள் – தவிர்க்க முடியாத – இன்றியமையாத – தேவைகளின் பொருட்டு வீட்டை விட்டு வெளியேறி மருந்தகங்களுக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டாலும் – இந்த அடையாள அட்டை முறைமையின் அடிப்படையிலேயே செல்ல வேண்டும்.
அப்போதும் – வீட்டுக்கு மிக அருகாமையில் திறந்து இருக்கும் மருந்தகங்களுக்கே செல்ல முடியும்.
எனவே – இந்த அடையாள அட்டை முறைமையை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் இடங்களில் பின்பற்றப்படவே நடைமுறைக்கு வருகின்றது என்பதனை மக்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.
உரிய காரணங்கள் இன்றி ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். – என தெரிவிக்கப்பட்டுள்ளது.