தொடருந்து சேவையை அத்தியவசிய சேவையாக்குவதற்கு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு விடுத்துள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதன அதிகரிப்பை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்த போதும் அதனை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு தவறியமைக்கு எதிராக வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் தொடருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
இதன்காரணமாக ஓய்வு பெற்ற தெடாருந்து இயந்திர சாரதிகள், நிலைய அதிபர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோரை மீண்டும் சேவையில் இணைத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவர்களை சேவைகளில் இணைத்து கொள்வதற்கான ஒழுங்குகள்; எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்தில்; மேற்கொள்ளப்பட்டுள்ளன.