தமது பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளில் இடம் கிடைப்பதில் சிரமம் நிலவுவதாக கூறி கல்வியமைச்சை முற்றுகையிட்ட அனைத்து வைத்தியர்களும் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கடுவல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று மாலை (14) இவ்வாறு கல்வியமைச்சினுல் பலவந்தமாக நுழைந்த வைத்தியர்கள் தொடர்ந்தும் அமைச்சின் கேட்போர்கூடத்தில் இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய, செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா உட்பட சங்க வைத்திய அதிகாரிகள் சிலரே இவ்வாறு கல்வியமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் கல்வியமைச்சு நீதிமன்றில் முறைப்பாடு செய்ததது. இதனை கருத்திற்கொண்ட நீதவான் நீதிமன்றம் கல்வியமைச்சில் தங்கியிருக்கும் மருத்துவர்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
வேலைத்தளம்