அபயாகரமான தொழில்களில் முதலிடம் வகிக்கும் தாதியர் தொழில்!

உலகின் அபாயகரமான தொழில்கள் மத்தியில் தாதியர் தொழில் முதலிடம் பெற்றுள்ளதாக சர்வதேச தாதியர் ஆலோசனை சபை (International Council of Nurses (ICN) தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் சுகாதாரத்துறையில் பணியாற்றும் 7000 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். அவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் தாதியர் துறையில் பணியாற்றுபவர்களாவர் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாகவும் தரவுகளை சேகரிப்பதற்கான சரியான முறைகள் இல்லையென்றும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உலக மக்களுக்கு சுகாதார சேவையை வழங்குவதற்கான துறையில் சுமார் 43.5 வீதமானர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 50 வீதமானர்கள் அதாவது 20 மில்லியனுக்கும் அதிகமானோர் செவிலியர் சேவை மூலம் சேவை வழங்குகின்றனர்.

பிறப்பு முதல் இறப்பு வரை நோயாளியின் உள்ளத்தி்ல் தங்கியிருக்கும் உருவம் அவள்.

அவள் தனது வாழ்க்கையை பொருட்படுத்தாமல் சேவை வழங்குகிறாள். மருந்து மற்றும் ஊசி மருந்துகளை வழங்குகிறாள்.
ஆய்வு, அறுவை சிகிச்சைக்கு தயாராக்குகிறாள். நீர் அருந்தக் கொடுப்பதுடன், உணவும் ஊட்டிவிடுவாள், சுத்தப்படுத்துவாள். அனைத்து சுகாதார குழுக்களையும் ஒருங்கிணைப்பதுடன், நோயாளர் வார்டுகளையும் நிர்வகிக்கிறாள்.

மில்லியன் கணக்கான மதிப்புள்ள அறுவை சிகிச்சை கருவிகளை பாதுகாக்கிறாள். செவிலியரின் செயற்பாட்டு முறை நோயாளியின் பராமரிப்பை மேம்படுத்துகிறது. நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற அவர் தனது உயிரைத் தியாகம் செய்கிறார்.

சுகாதார சேவை கட்டமைப்பின் முதுகெலும்பாகவுள்ள (WHO அறிக்கை) செவிலியர்கள், நோயாளர்களின் நோயைத் தடுப்பது, அனைத்து வயதுகளிலுமுள்ள உடல் மற்றும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டோர், ஊனமுற்றோர் என அனைவரினதும் சுகாதாரப் பாதுகாப்பு என்பன அதில் அடங்கும்.

இந்த பரந்த அளவிலான சுகாதாரப் பாதுகாப்புக்குள், செவிலியர்களுக்கான சிறப்பு கரிசனை நிகழ்வுகள் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் குழுக்கள் “உண்மையான அல்லது சாத்தியமான சுகாதாரப் பிரச்சினைகளுக்கான பதில்கள்” (ANA, 1980, பி.9).

இந்த செவிலியர் சேவை சுகாதார மறுசீரமைப்பு எதிர்வினைகள் முதல் நோயின் நீண்டகால சுகாதார மேம்பாட்டுக் கொள்கையின் வளர்ச்சிவரை பரவலாக உள்ளன.
நோய்வாய்ப்பட்ட அல்லது ஆரோக்கியமானவர்களைப் பராமரிப்பதில் செவிலியர்களின் தனித்துவமான பங்கு என்னவென்றால், அவர்களின் உடல்நிலை குறித்த அவர்களின் பதில்களை மதிப்பிடுவதும், உடல்நலம் அல்லது மீட்புக்கு பங்களிக்கும் அந்த நடவடிக்கைகளின் செயல்திறனுக்கு உதவுவதும் ஆகும். அவர்கள் ஆபத்தான நிலையில் இருந்தால் அவர்களுக்கு கௌரவமான மரணத்திற்கு உதவுதல்.

தேவையான வலிமை, விருப்பம் அல்லது அறிவு மற்றும் சுதந்திரத்தை விரைவில் பெற அவர்களுக்கு உதவுவதற்காக இதைச் செய்வது மற்றும் மதிப்பீட்டு செயல்பாடுகள் பிற சுகாதார வல்லுநர்களுடனும் பொது சேவையின் பிற துறைகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. (ஐ.சி.என்., 1987)

செவிலியர் தொடர்பான அர்த்தப்படுத்தல்

ஒரு செவிலியர் என்பது அடிப்படை, சாதாரணமான செவிலியர் கல்வியை முடித்தவர் மற்றும் அவரது / அவளது நாட்டில் செவிலியர் பயிற்சிக்கு பொருத்தமான ஒழுங்குமுறை அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர்.

அடிப்படை செவிலியர் கல்வி என்பது முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஆராய்வாகும். பல நாடுகளில், செவிலியர் கல்வி செவிலியர் பட்டத்துடன் தொடங்குகிறது, அவர்களுக்கு கலாநிதி பட்டம் பெற வாய்ப்பளிக்கிறது.

செவிலியர் சேவை, சாதாரண பயிற்சி, நிர்வாக தலைமைத்துவம் மற்றும் செயன்முறைக்கல்வி. சிறப்பு மற்றும் சிறப்புவாய்ந்த கல்வி அல்லது உயர் செவிலியர் கல்வி ஆகியவற்றில் ஒரு பரந்த மற்றும் உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது.

(1) சுகாதார சேவை மேம்பாடு, நோய் நிலைமையை கட்டுப்படுத்தல், உடல் மற்றும் உளவியல் நோயாளர்கள், விசேட தேவையுவடையோர், அனைத்து வயதுடையவர்கள், சுகாதார சேவை பாதுகாப்பு உற்பட செவிலியர் பயிற்சியில் சாதாரண விடயங்களில் தொடர்புபடுதற்கு செவிலியர் தயாராக வேண்டும்.
(2) பிற சமூக அமைப்புகள் மற்றும் சமூக சேவைகளை கற்பித்தல்.
(3) சுகாதாரக் குழுவின் உறுப்பினராக முழுமையாக பங்கேற்றல்.
(4) செவிலியர் மற்றும் சுகாதார உதவியாளர்களின் மேற்பார்வை மற்றும் பயிற்சி.
(5) ஆய்வுகளில் தொடர்புபடுதல் (ஐ.சி.என்., 1987) ஊடாக செவிலியர் சேவையை பலப்படுத்துவது.

குறிப்பு
புஷ்பா ரம்யானி சொய்சா
தேசிய பயிற்றுவிப்பு அதிகாரி

 

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435