அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 20,000 பட்டதாரிகள்

20 ஆயிரம் பட்டதாரிகள் அபிவிருத்தி உதவியாளர்களாக இணத்துக்கொள்ளவுள்ளனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


மட்டக்களப்பு ஏறாவூரில் 96 மில்லியன் செலவில் நிருமானிக்கப்பட்ட நகர சபையின் புதிய கட்டடத்தை நேற்றுமுன்தினம் (20) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் என்னைச் சந்தித்து பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக பேசினார்கள். இதுதொடர்பாக கல்வி அமைச்சருடன் பேசி கிழக்கு மாகாணத்தில் 1700 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம்.

தொழில் இல்லாத பட்டதாரிகள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இவர்கள் பல ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கிறார்கள். 20 ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி உதவியாளர்களாக நியமிக்க தீர்மானித்தோம். இவர்கள் பிரதேசத்தின் வருமானம், கைதொழில், பெண்களின் நடவடிக்கைகள் உட்பட பல பணிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இவர்களுக்கு முதலில் பயிற்சிகள் வழங்கப்படும். அதனையடுத்து பொறுப்புக்கள் வழங்கப்படும். தற்போதைய தேசிய வருமானம் முன்னைய ஆட்சிக்காலத்’தில் பெறப்பட்ட கடனுக்கான வட்டியை செலுத்துவதற்குக்கூட போதாமல் உள்ளது.இதனால் இவர்களை இணைத்துக்கொள்ள சற்று காலதாமதம் எடுத்தது என்று பிரதமர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதியமைச்சர் பைசல் காசிம், கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் ரோஹித போகல்லாகம, தவிசாளர் கலபதி, கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், சுகதார அமைச்சர் நஸீர், பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435