அம்பாந்தோட்டை உப்பள ஊழியருக்கேற்பட்ட அநீதி

பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அம்பாந்தோட்டை உப்பள பணியாளர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் நேற்று (02) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை உப்பளத்திற்கு முன்பாக நடைபெற்ற இவ்வெதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஈ.எச்.ஜகத் குமார எனப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

1994ஆம் ஆண்டு முதல் பல வருடங்கள் அம்பாந்தோட்டை உப்பளத்தில் பணியாற்றி வந்த குறித்த நபர், தான் பணிநீக்கம் செய்யப்படும் வரையில் தன்னாலான முழுமையான சேவையை வழங்கியதாகவும் தன்னை இவ்வாறு பணிநீக்கம் செய்தமை அநீதியான செயல் என்றும் தெரிவித்தார்.

தொழிலின்மை காரணமாக தனது பொருளாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தனக்கேற்பட்டுள்ள அநீதி தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435