அம்பாந்தோட்டை துறைமுகம்- விரைவில் நாடு தழுவிய போராட்டம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை முறைகேடான வகையில் சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து நாடு தழுவிய ரீதியில் போராட்டமொன்றை நடத்தப்போவதாக இலங்கை துறைமுகச் சேவைகள் பொது ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது.

மேற்படி துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு கையளித்ததன் ஊடாக நாட்டின் உழைக்கும் வர்க்கம் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்துள்ள அச்சங்கம் நாட்டை காப்பாற்றவும் துறைமுக ஊழியர் நலனுக்காகவும் தாம் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது.

மேலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகை அடிப்படையில் சீன நிறுவனத்திற்கு வழங்குவதானது நாட்டின் உழைக்கும் வர்க்கத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறித்த ஒப்பந்தமானது முற்றிலும் பொய்யானது என்றும் அதன் வெளிப்படை தன்மையை நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லையென்றும் அச்சங்கத்தின் தலைவர் சந்திரசிறி மகாகமகே தெரிவித்துள்ளார்.

உலகின் முக்கிய துறைமுகங்கள் 10இல் அம்பாந்தோட்டை துறைமுகமும் இடம்பிடித்துள்ளது. 1.6 பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இத்துறைமுகத்தில் பாரிய ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டது. தற்போது அத்துறைமுகம் 1.4 பில்லியன் டொலருக்கு சீனாவிற்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தையில் வர்த்தக ரீதியான அக்கறையை விடவும் பூகோள அரசியல் ரீதியான அக்கறையே மேலோங்கியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435