சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைக்காதவிடத்து நாளை (02) மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு சம்பள பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க தவறினால் இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அச்சங்கம் எச்சரித்துள்ளது.
பல தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக வேலைநிறுத்தப்போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. எனவே அவை குறித்து ஆராய்ந்து அதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான புதிய உபகுழு கடந்த வாரம் நியமிக்கப்பட்டது.
அமைச்சர்களான மங்கள சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, வஜிர அபேவர்தன, ராஜித்த சேனாரத்ன மற்றும் அசோக் அபேசிங்க ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
கடந்த இரு வருடங்களாக தமது சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.