அரசிற்கு சிவப்புக்கொடி காட்டும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இணக்கம் தெரிவித்தமைக்கமைய எமது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தர தவறினால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் எமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும் இதுவரை அரசின் நிலைப்பாடு என்ன என்று எமக்குத் தெரியாது. அறிவிக்க அரசாங்கம் ஆர்வம் காட்டவும் இல்லை. இந்நிலை தொடர்ந்தால் நாம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய கூடாது, திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு மற்றும் பொருளாதார எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை தூய்மைபடுத்தும் செயற்பாடுகளை அரசாங்கமே முன்னெடுக் வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே பெற்றோலிய தொழிற்சங்கம் கடந்த காலங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.

அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் தொழிற்சங்கத் தலைவர் ராஜகருணா எச்சரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435