அரச அதிகாரிகள் 350 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று அராங்க சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் காமினி செனவிரத்ன தெரிவிக்கையில், பல ஒழுக்காற்று நடவடிக்கைகள் வருடக்கணக்கில் நடைபெற்று வருவதாகவும் அரச நிர்வாக சேவை, கணக்காய்வாளர், கல்வி நிர்வாக சேவை, மருத்துவர் போன்ற துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கெதிராகவே இவ்வொழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
ஒழுக்காற்று நடவடிக்கைக்காக சில அதிகாரிகள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் ஒழுக்காற்று நடவடிக்கை தாமதிக்காதிருக்க விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்