அரச உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை

தேர்தல் கடமைகளை தவிர்க்கும், தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவுகளை மீறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை கூறி தேர்தல் கடமைகளை தவிர்க்கும் முயற்சியில் இம்முறை சில அரச உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கடமைகளை தவிர்ப்பதும் ஆணைக்குழுவின் உத்தரவுகளை உதாசீனப்படுத்துவதும் சட்டரீதியான குற்றமாகும். அவ்வாறு குற்றவாளியாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் மூன்று வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435