அரச உத்தியோகத்தர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள இரண்டாம் மொழி பரீட்சை முறைமையை இரத்துச் செய்வதற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கு அமைவான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து அதன் அனுமதியை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சிங்கள அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழியும் இந்த இரண்டாம் மொழி பரீட்சையின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அது யதார்த்தமானதல்ல என்பதால் அந்த பரீட்சைக்கு பதிலாக விசேட பயிற்சி நெறியை வழங்குவதற்கு உள்ளதாக யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.