தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சுயாதீனத்தன்மையை இல்லாதொழிக்கும் வகையில் செயற்படுவதாக இலங்கை அரச அதிகாரிகள் சங்க ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
நேற்று (17) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஒன்றியத்தின் தலைவர் சுமித் கொடிகார இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழு அரச நிர்வாக அமைச்சின் செயலாளரிடமும் விசாரணைகளை மேற்கொண்டது. ஒரு அரச சேவையாளரிடம் மிகவும் வெட்கமற்ற முறையில் கேள்விகளை கேட்டதை காணக்கூடியதாக இருந்தது.
அரச ஊழியர்களின் சீருடை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர் நிர்வாக அமைச்சின் செயலாளர் என்று கூறிய சுமித் கொடிகார, அவர் வௌியிட்ட சுற்றுநிரூபம் தொடர்பில் ஏதும் அறியாதது போலவே அமைச்சர்கள் கேள்விகளை எழுப்பினர்.
சீருடை தொடர்பில் கேள்வியெழுப்பு முழு அரச சேவையின் கௌரவத்திற்கும் பங்கம் விளைவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதனால் அரச சேவையின் சுயாதீனத்தன்மை இழக்கப்படுவதாகவும் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது செயற்படுமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
நன்றி- அத தெரண
வேலைத்தளம்