அரச ஊழியர்களின் மே மாத சம்பள விவகாரம்- சில தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

அரசாங்க ஊழியர்கள் தமது சம்பளத்தை கொவிட் 19 நிதிக்கு வழங்கவேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தரவின் கோரிக்கைக்கு பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பண்டிகைகால மிகை ஊதியம், மேலதிக கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மாத சம்பளத்தை நிதிக்கு வழங்குமாறு கோருவது நியாயமற்றது என்று அகில இலங்கை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட அச்சங்கத்தின் தலைவர் டொக்டர் கிஷாந்த தஸநாயக்க, கொவிட் 19 பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு மேலதிக மிகைக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

தமது வருமான வளங்களை இழந்திருக்கும் அரச உத்தியோகத்தர்களிடம் இவ்வாறான கோரிக்கையொன்றை முன்வைப்பது சாத்தியமற்றது என்று தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்களின் மே மாத சம்பளத்தை கொவிட் 19 நிதிக்கு வழங்குமாறு சுற்றுநிரூபமொன்றை அரசாங்கம் அனுப்பியுள்ளது. சம்பளத்தை கழிக்கும் முன்னர் ஊழியர்களின் அனுமதியை பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வஸந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்கவேண்டுமே தவிர ஊழியர்களிடம் இருந்த பெற முயலக்கூடாது. அரசாங்கத்திடம் பணம் இல்லாவிட்டால் எவ்வாறு அதிவேக வீதிகள் நிர்மாணிக்கப்படுகின்றன என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரச ஊழியர்கள் மே மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்க முன்வரவேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர நேற்றுமுன்தினம் (06) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம் – நியுஸ் ரேடியோ/வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435