
தேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார் கருத்துக்களை வௌியிடுவது குற்றமாக கருதப்படும்.
நீங்கள் அரசியல் கட்சி சார்ந்த அல்லது சாராத அரச உத்தியோகத்தராக இருக்கலாம்.
எவ்வாறாயினும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உங்கள் தனிப்பட்ட சமூகவலைத்தளங்களை மிகவும் அவதானமான முறையில் பாவியுங்கள்.
உங்கள் பதிவுகள் ஏதாவது அரசியல் கட்சியை ஆதரவளித்தாலும் சரி அல்லது விமர்சித்தாலும் சரி நீங்கள் அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவே கருத்தப்படுவீர்கள்.
இந் நடவடிக்கைகள் அனைத்தும் நீங்கள் குற்றம் புரிந்ததாகக் கருதப்பட்டு உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் அரசாங்க அலுவலகங்களில் அலுவலக நேரங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மேலும் தாங்கள் அரசாங்க வளங்களை பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாக மேலும் ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளாவீர்கள்.
எனவே தாங்கள் சமூகவலைத்தளங்களில் சுயமாகவோ அல்லது வேறொருவரின் பதிவினை பகிர்வதானாலும் மிகவும் அவதானமாக செயற்படுங்கள்.
நன்றி – யாழ்ஒலி