அரச சேவையில் ஓய்வூதியத்திற்குப் பதிலாக மாற்று முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இரஜாங்க அமைச்சர் ரவீந்தர சமரவீர கூறியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் போது போதுமான கொடுப்பனவை வழங்குவது தொடர்பிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கொடுப்பனவுக்காக வருடாந்த பாதீட்டில் 200 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டாலும் மாதாந்த கொடுப்பனவினூடாக 14 இலட்சம் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து திட்டமிட முடியாதுள்ளதாக இதன் போது அமைச்சர் தெரிவித்தார்.
அரச ஊழியரின் ஓய்வூதிய பங்களிப்புடன் அரசின் பங்களிப்பையும் வழங்கி முதிய வயதை சிறந்த முறையில் கழிக்க அவசியமான பொருளாதார நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் நோக்கம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாதவகையில் முன்னடெுககப்பட்டு வரும் மேன்பவர் சேவையை சட்டத்திற்குள் உள்ளீர்ப்பதற்கு முதற்கட்ட நடவடிக்கையாக ஊழியர் நம்பிக்கை மற்றும் சேம லாப நிதியத்தை குறித்த நிறுவனங்களினூடாக வழங்கவும் சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்- மவ்பிம