அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அமைய இவ்வாண்டுக்கு அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் முழுமையாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவாக ஆகக்கூடியது 15.000 ரூபாவும் ஆகக்குறைந்தது 3000.00 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
நான்கு பிரிவுகளில் இவ்வூக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அதற்கான சுற்றுநிரூபம் கடந்த 11ம் திகதி திரைசேரியினால் வௌியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நட்ட நிலைமையில் இருந்து இவ்வருடம் இலாபம் ஈட்டியுள்ள ஊக்குவிப்பு கொடுப்பனவு பெறாத நிறுவனங்களளின் ஊழியர்களுக்கு 15,000 ரூபா வழங்க இயலுமாகியுள்ளது. குறித்த ஆண்டில் நட்டத்தை சந்தித்து இந்த வருடமும் கடந்த வருடத்திற்கமையவே நட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள நிறுவன ஊழியர்களுக்கு 13,500 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நட்டத்தை சந்தித்து இவ்வருடம் ஒரு அளவுக்கேனும் நட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிறுவன ஊழியர்களின் கொடுப்பனவு 3,000 ரூபாவில் இருந்து 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நட்டத்தை சந்தித்து இந்த வருடம் இவ்வருடம் அந்நட்ட அளவை குறைக்க முடியாமல் போன நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவு வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் சமாதான ஒப்பந்தத்தினூடாகவோ அதற்கு சமமான புரிந்துணர்வு ஒப்பந்ததினூடாகவோ அல்லது சம்பளம் மற்றும் கொடுப்பனவு தற்போது நடைமுறையில் உள்ள அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் முழுமையான அரச கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிறுவனங்களுக்கு இச்சட்ட திட்டங்கள் செல்லுபடியாகாது. அந்நிறுவன ஊழியர்களுக்கு விரைவில் ஒரு மாத அல்லது இரு மாத சம்பளத்தை ஊக்குவிப்புக் கொடுப்பனவாக வழங்கப்படும்.
இக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முன்னர் திரைசேரி அனுமதியை பெறுவது கட்டாயமாகும்.