அரச துறையினரின் சம்பள மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம்

அரச துறையினரின் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செய்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரணுக்கே மீளாய்வு அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்ததுடன், குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இதன்போது வருகை தந்திருந்தனர்.

அரச துறையினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சுற்றுநிரூபங்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி அரச துறையினரின் சம்பளம் தொடர்பில் பிரச்சினைகள் அல்லது ஏற்றத்தாழ்வுகள் காணப்படுமாயின், அவற்றை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 2018-08-14 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்திற்கமைய ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

எஸ். ரணுக்கே தலைவராகவும் எச்.ஜீ.சுமனசிங்ஹ செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவானது 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435