எண்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா மற்றும் கம்பெரலிய திட்டத்தினூடாக அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வையிட 22000 பேர் புதிதாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று அரச, நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படும் அதிகாரிகள் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
கம்பெரலிய மற்றும் எண்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா திட்டத்தினூடாக நாடு முழுவதும் பல அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உடனடியாக அதிகாரிகளை நியமிக்கப்படவேண்டியுள்ளமையினால் விரைவில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் கோரியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.